Friday, May 22, 2015

SSLC பொது தேர்வில் தோல்வி அடைந்த வெற்றியாளர்களுக்கு....,




தேர்வில் தோற்றுபோனால் என்ன...?

தேர்வில் தோற்று போவதற்கும் , நம் வாழ்கையில் வெற்றி பெறுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை நீங்கள் விளங்கிகொள்ளுங்கள்...

வாழ்கையில் வெற்றிபெற்ற மனிதராக இன்று அறியப்படும் பலர் , தேர்வில் தோற்றவர்கள் மட்டுமல்ல, பள்ளிக்கூடம் பக்கம்கூட போகாதவர்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்..

உங்களுக்கு வைக்கப்படும் தேர்வுகள் ..
உங்கள் மொத்த அறிவை அளந்து பார்க்கும் அளவுகோள் அல்ல ...
அது உங்கள் நியாபக சக்தியை சோதித்து பார்க்கும் ஓர் ஆய்வறிக்கை மட்டுமே ...அந்த ஆய்வுகள் கூட மாறிகொண்டே தான் இருக்கும். எனவே
நீங்கள் தேர்வின் முடிவை வைத்து உங்களை மதிப்பிடாதீர்கள்... உங்கள் தனிதன்மையான திறமைகளை வைத்து மதிப்பிடுங்கள்..

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள் ... ஒப்பிட அனுமதிக்காதீர்கள் ... அது தான் உங்கள் பலத்தை பலவீனப்படுத்தும்..

எதையும் நினைத்து கலங்காமல் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள் ...
வெற்றி பெற முடியுமா என்று யோசிக்காதீர்கள் , வெற்றியை முடிவு செய்துகொள்ளுங்கள் .

என்றும் நினைவில் வைத்துகொள்ளுங்கள்...
வெற்றி நிரந்தரமல்ல...,
தோல்வி முடிவல்ல......

Thursday, January 22, 2015

புலியின் குணமும் - மனிதனின் மனமும்




தன்னிடம் வந்து மாட்டியவனை கொலை செய்ய பதினைந்து நிமிடங்கள் யோசித்த அந்த புலியின் தோல்மட்டுமல்ல உள்ளமும் வெள்ளை தான்...

ஏனெனில் அந்த மாணவனை காப்பாற்ற அது பதினைந்து நிமிடங்கள் அவகாசம் கொடுத்தது....

சக மனிதனின் உயிரை காப்பாற்ற பதினைந்து நிமிடங்கள் கிடைத்தும் அதை வேற்று கூச்சல் போட்டு நேரத்தை கடத்தி உயிரை பரிகொடுத்துவிட்டார்கள்.

எதுவுமே முடியவில்லை என்றால் ..

புலியா ? மனிதனா ? என்று வரும்போது சக மனிதன் முக்கியம் என்று கருதி .. புலியை சுட்டு கொன்றிருக்க வேண்டியவர்கள்.
புலி மீது தவறில்லை அந்த இளைஞன் மீது தான் தவறு என்கிறார்கள் ...

நாங்கள் இல்லையென்று சொல்லவில்லை.. எனினும் அவன் தற்செயலாக தடுப்பு சுவர் தாண்டி விழுந்துவிட்டான் , தற்கொலை செய்ய விழவில்லை...

சக மனிதன் உயிரைவிட அந்த புலி உயிர் தான் சிறந்தது என்றால் ... புலியிடம் கடிபட்டு உயிரைவிடுவதற்கு பதில்.. புலியிடம் மாட்டிய அந்த மாணவனை நீங்களே சுட்டு கொண்டிருக்கலாம்...

அவன் செத்தா--- நியூஸ்..

புலி இருந்தா .. காசு..

இது தானே உங்க கணக்கு ?

இளநீரும் - இளகிய என் மனமும்

காத்தால நான்கு மணிக்கே எந்துருச்சி , தோட்டம் தொரவு என்று அலஞ்சு, நல்ல மரமா பாத்து ஒன்னுக்கு ரெண்டு மரம் ஏறி பரிச்சி , கீழ விழுந்த எல்லாத்தையும் எண்ணி பொறுக்கி, வெல பேசி வாங்கிகிட்டு, உடைஞ்சு போன சைக்கிலில் கட்டமுடியாமல் கட்டி, வண்டிய தள்ளிகிட்டு வந்து நல்லா மக்கள் நடமாட்டமா உள்ள எடமாக பார்த்து வண்டிய நிறுத்தி... இளநீர் வியாபாரத்தை ஆரம்பிச்சா ...



ஸ்டைலா பைக்ல அங்கேந்து வந்து எவ்ளோ எலணி??? (இளநீர்) என்று கேட்க ... 15 ருபாய் தம்பி என்றவுடன்...
என்னோமோ கேட்ககூடாத வார்த்தையை கேட்கமாதிரி ...
அநியாயங்க.... ஏன் 15..?? 10 ரூபாய் தானே... என்று எகிறுகிறார் அந்த நியாயவான் ... 

இங்கு உண்மையில் யார் அநியாயகாரன் ...??
கேட்டால் இதுக்கு பேரு தான் திறமையாம் ....

அதே நபர் “ஒன் கோக் ப்ளீஸ்” என்று வாங்கி குடிக்கும் போது இப்படி தான் பேரம் பேசுவாரா , பேசத்தான் முடியுமா ?...

ஏன்.... கண்டதை குடித்து வயிறு வலிக்குது என்று டாக்டரிடம் போனாலோ ,அல்லது மெடிக்கல் போனாலோ ... மருந்து விலையை குறைத்து தர வற்புறுத்துவாரா ? அல்லது தனது இருப்புக்கு ஏற்றவாறு மருந்தை குறைத்து கொள்வாரா அந்த திறமைசாலி...

பேரம் பேசுவதில் குற்றமில்லை .. எதில் , யாரிடத்தில் , எதற்காக பேரம் பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும்..
பெரிய சூப்பர் மார்கெட்டிற்கு, மால்களுக்கு போனால் ஏன் இவ்ளோ விலை என்று கேட்பதில்லை.. அதை வாங்குவதற்கு நம்மிடம் பணம் இருக்கிறதா என்றே பார்க்கிறோம்... ஆயிரக்கணக்கில் செலவு செய்துவிட்டு வெளியில் வந்து களைப்பாக இருக்கிறது என்று ரோட்டோரமாக நிற்கும் இளநீர் விற்பவரிடம் இளநீர் வாங்கும்போது தான் நமக்கு தெரிகிறது நியாயம் ,அநியாயம் ....!!!!

வந்த நோயை குணப்படுத்த மருத்துவம் , மருந்து என்று மொத்தமாக பணத்தை வாங்கிகொண்டு டாக்டர்கள் செய்வது மக்கள் சேவை என்றால்...

வந்த நோயையும் , வரும் நோயையும் அழிக்கும் திறன் கொண்ட இளநீரை விற்பரும் டாக்டர் தான் ,
அவர் விற்பதும் மருந்து தான்..
இதுவும் மக்கள் சேவை தான்...

Saturday, January 3, 2015

பள்ளிக்கூடமும் - பிணக்குவியலும்.


வாழ்கையில் வலிகளும் - வழிகளும்


நம் மகிழ்ச்சியும் - கவலையும்


என் பணமும் - மனமும்


அமைதியான முடிவு


நம் தனித்தன்மைகளும் - அடையாளங்களும்


நம் சந்தோசங்களை எங்கே


நமக்கே தெரியாத நம் பலம்


நம் தேவையும் - ஆசையும்