Thursday, January 22, 2015

இளநீரும் - இளகிய என் மனமும்

காத்தால நான்கு மணிக்கே எந்துருச்சி , தோட்டம் தொரவு என்று அலஞ்சு, நல்ல மரமா பாத்து ஒன்னுக்கு ரெண்டு மரம் ஏறி பரிச்சி , கீழ விழுந்த எல்லாத்தையும் எண்ணி பொறுக்கி, வெல பேசி வாங்கிகிட்டு, உடைஞ்சு போன சைக்கிலில் கட்டமுடியாமல் கட்டி, வண்டிய தள்ளிகிட்டு வந்து நல்லா மக்கள் நடமாட்டமா உள்ள எடமாக பார்த்து வண்டிய நிறுத்தி... இளநீர் வியாபாரத்தை ஆரம்பிச்சா ...



ஸ்டைலா பைக்ல அங்கேந்து வந்து எவ்ளோ எலணி??? (இளநீர்) என்று கேட்க ... 15 ருபாய் தம்பி என்றவுடன்...
என்னோமோ கேட்ககூடாத வார்த்தையை கேட்கமாதிரி ...
அநியாயங்க.... ஏன் 15..?? 10 ரூபாய் தானே... என்று எகிறுகிறார் அந்த நியாயவான் ... 

இங்கு உண்மையில் யார் அநியாயகாரன் ...??
கேட்டால் இதுக்கு பேரு தான் திறமையாம் ....

அதே நபர் “ஒன் கோக் ப்ளீஸ்” என்று வாங்கி குடிக்கும் போது இப்படி தான் பேரம் பேசுவாரா , பேசத்தான் முடியுமா ?...

ஏன்.... கண்டதை குடித்து வயிறு வலிக்குது என்று டாக்டரிடம் போனாலோ ,அல்லது மெடிக்கல் போனாலோ ... மருந்து விலையை குறைத்து தர வற்புறுத்துவாரா ? அல்லது தனது இருப்புக்கு ஏற்றவாறு மருந்தை குறைத்து கொள்வாரா அந்த திறமைசாலி...

பேரம் பேசுவதில் குற்றமில்லை .. எதில் , யாரிடத்தில் , எதற்காக பேரம் பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும்..
பெரிய சூப்பர் மார்கெட்டிற்கு, மால்களுக்கு போனால் ஏன் இவ்ளோ விலை என்று கேட்பதில்லை.. அதை வாங்குவதற்கு நம்மிடம் பணம் இருக்கிறதா என்றே பார்க்கிறோம்... ஆயிரக்கணக்கில் செலவு செய்துவிட்டு வெளியில் வந்து களைப்பாக இருக்கிறது என்று ரோட்டோரமாக நிற்கும் இளநீர் விற்பவரிடம் இளநீர் வாங்கும்போது தான் நமக்கு தெரிகிறது நியாயம் ,அநியாயம் ....!!!!

வந்த நோயை குணப்படுத்த மருத்துவம் , மருந்து என்று மொத்தமாக பணத்தை வாங்கிகொண்டு டாக்டர்கள் செய்வது மக்கள் சேவை என்றால்...

வந்த நோயையும் , வரும் நோயையும் அழிக்கும் திறன் கொண்ட இளநீரை விற்பரும் டாக்டர் தான் ,
அவர் விற்பதும் மருந்து தான்..
இதுவும் மக்கள் சேவை தான்...

No comments:

Post a Comment